ஓடிடி சேவை வழங்கும் குறைந்த விலை ஜியோ ரீசார்ஜ்கள்

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவன் ரிலையன்ஸ் ஜியோ. பயனர் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி மாற்றுவதில் ஜியோ அதிக கவனம் செலுத்தி வருகிறது. டெலிகாம் சந்தையில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடும் போட்டியை கருத்தில் கொண்டு அவ்வப்போது ரீசார்ஜ் திட்டங்கள் மாற்றம் செய்யப்படுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

அந்த வகையில், ஓடிடி தளங்கள் இந்தியாவில் அதிக பிரபலமாகி உள்ள சூழ்நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் ஓடிடி சந்தாவையும் இணைத்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களில் ஓடிடி சந்தாவையும் சேர்த்தே வழங்குகிறது.

அப்படி ஓடிடி சந்தாவுடன் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்திய பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 100, ரூ. 195 மற்றும் ரூ. 175 என மூன்று விலைகளில் ஓடிடி சந்தா வழங்கும் ரீசார்ஜ்களை வழங்கி வருகிறது. இந்த மூன்று ரீசார்ஜ்களும் பயனர்களுக்கு டேட்டாவுடன் பொழுதுபோக்கு சேவையையும் இணைந்தே வழங்குகின்றன.

இந்த மூன்று ரீசார்ஜ்களில் இரண்டு திட்டங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகின்றன. இதில் ஒரு சலுகை மட்டுமே வேறொரு ஓடிடி சந்தா வழங்குகிறது. ஓடிடி பலன்களை வழங்கும் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஓடிடி சந்தா வழங்கும் குறைந்த விலை ரூ. 100 ரீசார்ஜ் திட்டம் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இரண்டாவதாக உள்ள ரூ. 195 திட்டம் 15 ஜிபி வரையிலான டேட்டா மற்றும் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. கடைசியாக உள்ள ரூ. 175 திட்டம் 10 ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

இந்த ரிசார்ஜில் பயனர்கள் – சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கஞ்ச்லங்கா, பிளானட் மராத்தி, சௌப்பல், ஹொய்சொய் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

Leave a Comment