latest news
என்ட்ரி லெவல் மொபைலுக்கு மரண அடி.. தாறுமாறு மொபைலை கிளம் இறக்கிய லாவா..

இந்திய மொபைல் உற்பத்தி நிறுவனமான லாவா சீன நிறுவனங்களுடன் போட்டி போட அவர்களுக்கு இணையான சிறப்பம்சங்களில் அதுவும் பட்ஜெட்டில் புதிய போனை களம் இறக்கி உள்ளது. அந்த வகையில் தனது புதிய என்ட்ரி லெவல் மொபைல் ஆன லாவா ஸ்ட்ரோம் லைட் 5ஜி ( Lava Storm Lite 5G) அறிமுகம் செய்துள்ளது.
சீன நிறுவனங்களே அதிக சிறப்பம்சங்களை கொடுத்து பத்தாயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்கின்றனர். ஆனால் இந்திய நிறுவனமான லாவா 8000 பட்ஜெட்டில் தாறுமாறு பியூச்சர்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

Lava Storm Lite 5G
அதன் சிறப்பம்சங்கள் :
மீடியாடெக் டிமன்சிட்டி 6,400 ஆக்டாகோர் பிராசஸரை இந்த விலைக்கு கொடுத்துள்ளது. மேலும் 50 எம்பி சோனி கேமராவை முதன்மை கேமராவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு இந்த பிராசசர் மட்டும் கேமரா யாரும் எதிர்பாராதது.
மேலும் முன்புற செல்பி கேமராவாக 8 மெகாபிக்சல் கொண்டு வருகிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. மற்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இதனுடன் வருகிறது.
வாட்டர் ட்ராப் கேமரா டிசைன் கொண்ட டிஸ்ப்ளே வழக்கம் போல எல்சிடி ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே ஆக கிடைக்கிறது. மேலும் ஃபேஸ் அன்லாக் சைடு பிங்கர் பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இதனை சார்ஜ் செய்வதற்கு 15வாட் கொண்ட சூப்பர் சார்ஜர் உடன் வருகிறது. மேலும் இதில் கூடுதலாக மெமரி கார்டு போடுவதற்கு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. அமேசான் தளத்தில் இந்த மொபைலின் விலை 8000 ரூபாய். வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம்.
