ஒட்டுமொத்த மார்க்கெட்டும் திணற போது.. 15000 பட்ஜெட்.. 50 எம்பி கேமரா.. அசத்தும் லாவா வின் புது மொபைல்..

சைனீஸ் போன்கள் இந்தியாவில் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் தனது கைக்குள் வைத்திருக்கிறது. இதற்கிடையே இந்திய நிறுவனமான லாவா தனது புதிய பட்ஜெட் ரக மாடலை வருகிற ஜூன் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் இன்று சந்தையில் இருக்கும் சைனீஸ் ஃபோன்களுக்கு கடும் போட்டியாக இருப்பது போல் தெரிகிறது.

அந்த வகையில் லாவா ஸ்ட்ரோம் பிளே 5ஜி மாடல் மொபைல் போன் பலவகை சிறப்பம்சங்களை உள்ளடக்கி உள்ளது. முக்கியமாக இதில் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7060 பிராஸசர் கொண்டு வர உள்ளது. பின்புற முதன்மை கேமராவாக 50mp உடன் வர இருக்கிறது. இதில் 6.7 இன்ச் எல்சிடி hd+ 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் டிஸ்ப்ளே கிடைக்கிறது.

Lava Storm Play 5G
Lava Storm Play 5G

இதில் 6 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 os உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரக்கூடிய அனைத்து மாடல் ஃபோன்களிலும் ஆண்ட்ராய்டு 15 ஓ எஸ் உடன் தான் வருகிறது. இதிலும் அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லாவா ஸ்ட்ரோம் ப்ளே மொபைல் இரண்டு கலரில் கிடைக்கிறது வெள்ளை மற்றும் கருப்பு நிறைகள் கொண்ட டிசைனில் வெளிவர உள்ளது. ஏற்கனவே லாவா 4ஜி 13 ஆயிரத்து 500 விலையில் வெளியானதால் இந்த மாடல் 15,000 ரூபாய் விலையில் இருக்கலாம் அல்லது அதை விட குறைவாகவும் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment