டைமண்ட் சிட்டி 6400.. 50mp சோனி கேமரா..‌ 5000mah பேட்டரி.. அடிமட்ட விலையில் பக்கா போன் என்ன மாடல் ..?

என்னதான் சைனீஸ் மொபைல்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் இந்திய நிறுவனமான லாவா அவர்களுக்கு இணையான சிறப்பம்சங்களை கொடுத்து இந்திய சந்தையில் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் தரமான சிறப்பம்சங்களுடன் வெளியான லாவா ஸ்ட்ரோம் லைட் 5ஜி தற்போது இன்னும் மலிவு விலையில் கிடைக்கப்பெறுகிறது. 7,999 ரூபாய் விலையில் விற்கப்படும் இந்த ஸ்மார்ட் போன் மேலும் வங்கி ஆஃப்பரை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் முதல் தள்ளுபடி பெற்று 6,999 ரூபாய்க்கு பெற முடியும்.

லாவா ஸ்ட்ராம் லைட் 5g பயிற்சி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இது 120 hz ரெஃப்ரஸ்ரேட்டுடன் சிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை கொடுக்கிறது. இதில் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 6,400 என்ற சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது தினசரி உபயோகத்திற்கு பக்காவாக பொருந்தும். கேமரா அமைப்பை பொருத்தவரை இதில் 50 எம்பி சோனி கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா என டூயல் கேமரா செட்டப் உடன் வருகிறது.

Lava Storm Lite 5G
Lava Storm Lite 5G

முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை 5 எம்பி செல்பி கேமரா வருகிறது. மேலும் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் ரேம் வகையை அதிகரித்து கொள்ளும் வசதியான வெர்ச்சுவல் ரேம் வசதியும், அதிகப்பட்சமாக 4gb வரை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் இது 64 ஜிபி மெமரி வசதியுடன் வருகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 15 ஒயஸ் உடன் இயங்குகிறது.

மேலும் இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்பு தரச் சான்றுகளான ஐபி 64 ரேட்டிங்குடன் வருகிறது. மேலும் இதில் சைட் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5000mah பேட்டரி வசதியும் உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15 w சார்ஜரும் வருகிறது. மேலும் இதில் டைப் சி ப்ளூடூத் 3.5 mm ஜாக் போன்ற கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது.

Leave a Comment