Connect with us

tech news

50MP கேமரா, 5000mAh பேட்டரி… ரூ. 7,999 விலையில் சூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published

on

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மற்றும் ஸ்டார்ம் பிளே 5ஜி என அழைக்கப்படும் புதிய மாடல்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

அம்சங்களை பொருத்தவரை லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதே போன்று ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7060 பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான். இத்துடன் இந்த பிரிவில் முதல் முறையாக 6 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்ளை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு புதிய லாவா ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் 5000mAh பேட்டர மற்றும் முறையே 15 வாட், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளன. இரு மாடல்களுக்கும் 1 ஆண்ட்ராய்டு அப்கிரேடு மற்றும் 2 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மாடல் ஆஸ்ட்ரல் புளூ மற்றும் காஸ்மிக் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999 என துவங்குகிறது. இது அறிமுக விலை என்று லாவா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் ஜூன் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவும் அறிமுக விலை தான் என்று லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

google news