மேக்புக் மாடலுக்கு பயங்கர ஆஃபர் வழங்கும் அமேசான்… உடனே வாங்கலாம் போலயே..!

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M2 மாடலுக்கு இந்தியாவில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சற்றே பழைய மாடல் என்ற போதிலும், இந்த லேப்டாப் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மேக்புக் ஏர் M2 மாடல் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. தள்ளுபடி சலுகை ஆப்பிள் வலைதளத்தில் வழங்கப்படவில்லை. இந்த சலுகை அமேசான் வலைதளத்தில் வழங்கப்படுகிறது.

மேக்புக் ஏர் M2 மாடலின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 77,990 ஆகும். அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது விலையை ரூ. 5000 வரை குறைக்க முடியும். இது லேப்டாப் விலையை ரூ. 72,990 என மாற்றிவிடும். இத்துடன் எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை மேக்புக் ஏர் M2 மாடலில் 13.6 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 8 கோர் CPU 10 கோர் GPU, அதிகபட்சம் 24 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 18 மணி நேர பேக்கப் வழங்குகிறது. வீடியோ கால் மேற்கொள்ள 1080 பிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதி உள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் M2 மாடலின் டிசைன், எடை மற்றும் அதன் திறன் என மூன்றும் ஒருங்கணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1.24 கிலோ மட்டுமே. இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைப்பதோடு, மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Leave a Comment