மெட்டா AI யூஸ் பண்றீங்களா.. போச்சு மொத்த டேட்டாவும் எடுத்துட்டாங்க..

சமீப காலமாக பெரும்பாலானோர் எதற்கெடுத்தாலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் நமக்குத் தேவையானவைகளை கேட்டு பெருகின்றோம். சிலர் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள் மேலும் அதற்கான தீர்வும் கேட்கிறார்கள். சிலர் தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

டிஜிட்டல் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள மெட்டா பேஸ்புக், வாட்ஸ் அப் instagram போன்ற செயலிகளில் மெட்டாவின் தனி நபர்களின் விவரங்களை பெற்றறிந்து அதை வெளிப்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. AI செயலியில் பிரவுசர்களின் டிஸ்கவர் பகுதியில் feeds-ல் பயனர் தொடர்பான விபரங்களை பகிரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமான கேள்விகள் மற்றும் ஆடியோ உள்ளிட்ட அவர்களின் அரட்டைகள் யாவரும் பார்க்கும் வகையில் வெளியிடப்படுகின்றன. இந்த மாதிரி வெளியிடப்படுவது பல பயனாளர்களுக்கு தெரியாது என்பதுதான் இன்றைய பிரச்சினையாக உள்ளது. உங்கள் AI தேடல் எவ்வளவு தனிப்பட்டதாக இருந்தாலும் அதை எல்லாராலும் பார்க்கக்கூடிய வகையில் இருக்கலாம் என்று டெக் க்ரஞ்சின் அறிக்கை கூறுகிறது.

அதன் படி ஒரு தனி நபரின் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட ஆலோசனைகள் மருத்துவ பிரச்சினைகள் நீதிமன்ற பகிர்வுகள் மற்றும் முழு வீட்டு முகவரிகள் போன்ற பதிவுகள் அதிகப்படியாக பகிர்வுக்கு வலியுறுத்துள்ளது.

இதனால் மக்களின் நம்பிக்கையை மீறல் போல உணரும் ஒரு வடிவமைப்பு குறைபாடாக மெட்டா AI பார்க்கப்படுகிறது. மெட்டா AI நிறுவனம் இந்த குறைபாடுகளை சீக்கிரம் சரி செய்து பயனர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment