Meta (Facebook, Instagram) மீதான வழக்கில் வந்த புதிய ஆவணங்கள் முக்கிய குற்றச்சாட்டை எழுப்புகிறது. Court filingல், Meta தனது appsல் teen safety features கொண்டு வர வேண்டும் என்று உள்துறை குழு பலமுறை பரிந்துரைத்திருக்கிறதாம்.
ஆனாலும், அப்படி ஒரு வசதி வந்தால் user engagement குறையும் என்று நினைத்து, Meta அவற்றை தள்ளி வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் அந்த வசதியில், இளம் வயதினருக்கு default private accounts, harmful content குறைக்க filters, screen time கட்டுப்படுத்தும் tools ஐடியாக்கள் இருந்ததாம்.
ஆனால், இப்படி செய்யும் போது appல் அந்த வயதினர் நிறைய நேரம் செலவழிப்பதை குறைக்கும் என்பதால், Meta அவற்றை பயன்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும், ப்யூட்டி ஃபில்டர்ஸ் மற்றும் அவர்கள் தேடலுக்கான தகவல்கள் மட்டும் சில சமயம் teensக்கு mental healthக்கு பாதிப்பு தரும் என்று Metaவின் உள்துறை ஆய்வுகளே கண்டுபிடித்ததாக ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அந்த தகவல்கள் பொதுமக்களுக்கு சொல்லப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Meta இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, “நாங்கள் பல safety tools உருவாக்கியிருக்கிறோம், இவை உண்மை அல்ல என விளக்கம் கொடுத்துள்ளது.