மிவி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏஐ பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல், முழு ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆகும். இதில் வாய்ஸ் சார்ந்து இயங்கும் ஏஐ சிஸ்டம் வசதி உள்ளது. பயனர்கள் இதன் மூலம் ஏஐ-உடன் உரையாட முடியும்ம. மிவி ஏஐ என அழைக்கப்படும் இந்த மாடல் மெமரி வசதியும், இதற்கான செயலியுடனும் வருகிறது.
இந்த இயர்பட்ஸில் 13 மில்லிமீட்டர் டிரைவர், குவாட் மைக்ரோபோன் செட்டப் மற்றும் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய மிவி ஏஐ இயர்பட்ஸ் யுனிபாடி மெட்டாலிக் பாடி மற்றும் ஹவர்-கிளாஸ் சார்ந்த ஸ்டெம் டிசைன் மற்றும் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் டிசைன் கிட்டத்தட்ட மிவி சூப்பர்பாட்ஸ் கான்செர்டோ மாடலை போன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 13 மில்லிமீட்டர் டிரைவர், குவாட் மைக்ரோபோன் செட்டப் மற்றும் 52 கிராம் எடை கொண்டுள்ளது.
இத்துடன் 3டி சவுண்ட்-ஸ்டேஜ், ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி மற்றும் LDAC கோடெக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதனை முழு சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.
இவைதவிர மிவி ஏஐ மாடலில் IPX4 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் கனெக்டிவிட்டி மற்றும் கேமிங் மோட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸின் குறிப்பிடத்தக்க அம்சமாக மிவி ஏஐ அசிஸ்டண்ட் உள்ளது. இது குரல் சார்ந்து இயங்கும் டிஸ்டம் ஆகும். இதனை நேரடியாக இயர்பட்ஸில் இருந்தே இயக்க முடியயும்.
இந்திய சந்தையில் புதிய மிவி ஏஐ பட்ஸ் விலை ரூ. 6,999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 5,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக், பிரான்ஸ், ஷேம்பெயின் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிவி இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.