8GB ரேம், 68W அதிவேக சார்ஜிங்… பயங்கர விலை குறைப்பில் கிடைக்கும் மோட்டோ போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிக பிரபலமான எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்று மோட்டோ எட்ஜ் 50 Fusion 5ஜி. இந்த ஸ்மார்ட்போன் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பிரிவு காரணமாக பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் 50 Fusion 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைந்துள்ளது. சமீபத்தில் தான் மோட்டோ எட்ஜ் 60 Fusion ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எட்ஜ் 50 Fusion குறைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் மோட்டோ எட்ஜ் 50 Fusion 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 22,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருப்பது புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு நல்ல டீலாக இருக்கும். மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 50 Fusion 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

விலை விவரங்கள்:

விலை குறைப்பை தொடர்ந்து இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 50 Fusion ஸ்மார்ட்போனின் விலை அமேசானில் ரூ. 18,990 என துவங்குகிறது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும். இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1,250 வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ. 849 விலையில் ஒரு ஆண்டுக்கான ஸ்கிரீன் பாதுகாப்பு மற்றும் டோட்டல் ப்ரோடெக்ஷன் ரூ. 1199 விலையில் வழங்குகிறது.

அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் 50 Fusion மாடலில் pOLED Curved டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், சோனி பிராண்டு கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 68W சார்ஜிங் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பேன்டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Leave a Comment