போனா வராது மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடி ஆஃபரில் மோட்டோ போன்.. என்ன மாடல் ?

கடந்த சில தினங்களாக இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து பொருட்களை விற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது மோட்டோவின் ஏட்ஜ் 60 பியூஷன் 5g (moto edge 60 fusion 5g)மொபைலுக்கு 5000 ரூபாய் வரை ரேட் கட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் ஆக 17,000 வரை கிடைக்கிறது.

தற்போது flipkart-ல் இந்த மொபைல் 22,999 ரூபாயில் விற்பனைக்கு வருகிறது. பேங்க் ஆபரர்களை பயன்படுத்தும் போது இந்த மொபைலை 20, 999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 4000 ரூபாய் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதனால் இந்த மொபைலை 20 ஆயிரம் பட்ஜெட்டுக்கு கீழ் இதன் விலை இருக்கும். இந்த விலைக்கு இந்த மொபைல் தரமான ஆஃபர் என்றே சொல்லலாம்.

moto edge 60 fusion 5g மொபைல் சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் கொண்ட பிஓஎல்இடி டிஸ்ப்ளே கர்வ் டிசைன் வடிவமைப்புடன் 120hz ரெஃப்ரேஷ் ரேட்டுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i வருகிறது. மேலும் டைமண்ட் சிட்டி 7400 ப்ராசசர் கொண்டு வருகிறது. இது தினசரி உபயோகத்திற்கு எந்த ஒரு இடையூறும் என்று பக்கவாக இங்கு கூடியது.

மேலும் இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மற்றும் 8ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் உடன் வருகிறது. இதில் கேமரா அமைப்பை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் கொண்ட பெரிய கேமரா உள்ளது. மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ் பொருத்தவரை 13 மெகாபிக்சல் உள்ளது.

முன்புற செல்பி கேமராவை பொறுத்த வரை 32 மெகாபிக்சல் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி 5500mah கொண்ட பெரிய பேட்டியாக உள்ளது. இது ஒரு நாள் முழுக்க பயன்பாட்டுக்கு வரும். இதனை சார்ஜ் செய்வதற்கு 68w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது. flipkart-ல் இந்த மோட்டோ மொபைலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிரடி தள்ளுபடியை பயன்படுத்தினால் விலைக்கேற்ற அம்சங்களுடன் ஒரு தரமான மொபைல் கிடைக்கும்.

Leave a Comment