மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 1.5K pOLED Quad Curved டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்மார்ட் வாட்டர் டச் 3.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் கை ஈரமாக இருக்கும் போதும், ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்கள், வைபை 6E கனெக்டிவிட்டி உள்ளது. இந்த மாடல் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓ.எஸ். கொண்டிருக்கிறது. மேலும், இதற்கு மூன்று முக்கிய ஓ.எஸ். அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ சென்சார் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மற்றும் 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய மோட்டோ எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 25,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 24,999 விலையில் வாங்கிட முடியும்.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் – ஜிப்ரல்தார் சீ மற்றும் ஷாம்ராக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது.