5500mah பேட்டரி.. 33w சார்ஜர்.. 50mp சோனி கேமரா.. வெளியானது மோட்டோவின் புதிய பட்ஜெட் மொபைல்.. என்ன மா

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அதிரடியான சிறப்பம்சங்களை கொடுத்து இந்திய மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கவர்ச்சிகரமான சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி 96 மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ ஜி 96 சிறப்பம்சங்கள் :
மோட்டோ ஜி 96 5g மொபைலில் 6.6 இன்ச் hd+ 3டி கர்வ் poled டிஸ்ப்ளே 144hz ரெஃப்ரஸ் ரேட்டுடன் 1600 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராசசர் ஸ்னாப்டிராகன்7s ஜென் 2 மற்றும் இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக lpddr4x ரேம் வருகிறது. மேலும் இதில் யூ எஃப் எஸ் 2.2 ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

moto g96 5g
moto g96 5g

மேலும் இது ஆண்ட்ராய்டு 15 os உடன் வருகிறது. இதற்கு மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் மற்றும் சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்படும் என்று மோட்டோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் சோனி சென்சார் உடன் ஓ ஐ எஸ் சப்போர்ட்டுடன் முதன்மை கேமரா வருகிறது, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் உடனும் டூயல் ரியர் கேமரா சட்டப் உடன் வருகிறது.

32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் முன்புற கேமரா 4k வீடியோ சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும் இதில் மோட்டோ ஏஐ இமேஜ் பிராசசிங் டெக்னாலஜியும் இருக்கிறது. இதன் பேட்டரியை பொருத்தவரை 5500mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதன் பயன்பாடு ஒருநாள் முழுக்க வரும் இதனை சார்ஜ் செய்வதற்கு 33w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜரும் வருகிறது.

மேலும் 5g,4g,ப்ளூடூத் 5.2, wi-fi, gps, டைப் சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற டால்பி அட்மாஸுடன் ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள் வருகிறது. தூசி மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சான்றுகளான ஐபி 68 ரேட்டிங்குடன் வருகிறது.

விலை பொருத்தவரை 8ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் 17,999 ரூபாய் ஆகும் 8 ஜிபி 256 ஜிபி 19,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேங்க் ஆபர்களை பயன்படுத்தும் போது இன்னும் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இது பிளிப்கார்ட் இணையதளத்தில் வருகிற ஜூன் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ‌

Leave a Comment