12GB ரேம், 256GB மெமரி, மிலிட்டரி கிரேடு தரம்… பட்ஜெட் விலையில் கிடைக்கும் மோட்டோ போன்…

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எட்ஜ் 60 Fusion ஸ்மார்ட்போனின் புதிய நிற வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறம் பேன்டோன் மிகோனோஸ் புளூ என அழைக்கப்படுகிறது. இந்த நிற வேரியண்ட் இந்திய சந்தையில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்று மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பேன்டோன் ஸ்லிப்-ஸ்டிரீம், அமேசானைட் மற்றும் செஃபிர் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய வேரியண்ட் சேர்த்து இந்த ஸ்மார்ட்போன் மொத்தத்தில் நான்குவித நிறங்களில் கிடைக்கும்.

புதிய பேன்டோன் மிகோனோஸ் புளூ நிற மோட்டோரோலா எட்ஜ் 60 Fusion ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 22,999 மற்றும் ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தற்போது விசேஷ விளம்பர சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎஃப்சி, ஐடிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை மாத தவணை மற்றும் முழு தொகையை செலுத்தி வாங்கும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 Fusion அம்சங்கள்:

மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 60 Fusion ஸ்மார்ட்போனினை மிலிட்டரி கிரேடு தரத்திற்கு ஏற்ப உருவாக்கி இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கிடைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K Curved pOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மூன்று கேமரா சென்சார்களும் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டுள்ளன. மேலும், வீடியோ ஸ்டேபிலைசேஷன், டைம்-லாப்ஸ், ஸ்லோ மோஷன், ஆடியோ ஜூம் மற்றும் டூயல் கேப்ச்சர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7400 பிராசஸர், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும், இதில் 68 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி உள்ளது. மேலும், டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி சி ஆடியோ மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment