220 mp கேமரா.. 12 ஜிபி ரேம்.. 6100mah பேட்டரி.. தாறுமாறு மொபைலை களம் இறக்கும் மோட்டோரோலா

மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் தற்போது 220mp கேமரா கொண்டு 12 ஜிபி ரேம் கொண்ட ஒரு கேமிங் மொபைலை வெளியிட உள்ளதாக லீக்ஸ் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன் அடிப்படையில் இது ஒரு கேமிங் மொபைல் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மோட்டரோலாவின் எட்ஜ் மற்றும் ரேசார் மொபைல்களில் உள்ள டிஸ்ப்ளே மிகச் சிறப்பாக இருந்தது. அதே டிஸ்ப்ளேவை இதிலும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மோட்டரோலாவின் ஏஜ் ரக மொபைல்கள் ஏற்கனவே 200 எம்பி கேமராக்கள் கொண்டு தான் வருகிறது உதாரணத்துக்கு எட்ஜ் 30 அல்ட்ரா சொல்லலாம். இந்த மொபைலில் முக்கிய நோக்கமே கேமரா மற்றும் கேமிங் பிரியர்களை கவர்ந்திழுக்கவே இதன் வடிவமைப்பு உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் பி ஓ எல் இ டி(poled) 120 ரெஃப்ரெஷ்ரேட்டுடன் மிகவும் ஸ்மூத்தான டிஸ்ப்ளே கிடைக்கிறது. இதன் பிராசசர் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை இருப்பினும் இது மிட் ரேஞ்ச் ஸ்னாப் டிராகன் அல்லது டைமண்ட் சிட்டி கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ram பொருத்தவரையில் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி அடிப்படையில் வருகிறது.

256 gb ஸ்டோரேஜ் அடிப்படையில் வருகிறது. கேமராவை பொருத்தவரையில் 220 எம்பி ஓஐஎஸ் ஸ்டெபிலிட்டி கொண்டு வருகிறது, மேலும் அல்ட்ரா வைடு 50 எம்பி மட்டும் டெலிபோட்டோ கேமரா 12 எம் பி என இதன் கேமரா அமைப்பு இருக்கும் என்று லீக்ஸ் இன் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுகிறது. முன்புற செல்பி கேமரா 60 எம்பி கேமராவாக இருக்கலாம். இதில் உள்ள மிகப்பெரிய பேட்டரி அதாவது 6100 mah, பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 90w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

மேலும் இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 உடன் கிளீன் சாஃப்ட்வேர் அனுபவத்தை கொடுக்கிறது. இதில் 5 ஜி, wi-fi 6, ப்ளூடூத் 5.3, nfc போன்ற சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது. மேலும் ஐபி 68 ரேட்டிங் கொண்டு வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு மவுண்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டு வருகிறது. எட்ஜ் 60 சீரியஸில் உள்ள கேமராவில் ஏ ஐ பயன்பாடு எப்படி இருந்ததோ அதைவிட இதில் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேருடன் சிறப்பாக இருக்கும் என்று மோட்டோரோலா தெரிவிக்கிறது.

மேலும் இந்த போன் மார்க்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு கடும் போட்டியை இந்த மொபைல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மொபைல் வெளிவரும் அன்று motorola இதன் விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

Leave a Comment