அமோலட் டிஸ்ப்ளே.. நீண்ட நாட்கள் பேட்டரி யூசேஜ்.. ஸ்டீல் பாடி.. பட்டைய கிளப்பிய ஹூவாய் வாட்ச்

ஹுவாய் நிறுவனம் இந்தியாவில் அதிரடியான சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 மற்றும் ஹுவாய் வாட்ச் பிட் 4 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் என்னென்ன பிரிமியம் சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

HUAWEI WATCH FIT 4 Pro
HUAWEI WATCH FIT 4 Pro

ஹூவாய் வாட்ச் பிட் 4 ப்ரோ சிறப்பம்சங்கள் :
இதில் 1.8‌ இன்ச் அளவுள்ள அமோலட் டிஸ்ப்ளே உள்ளது. அலுமினியத்தால் இதன் பாடி உருவாக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் அலாய் மற்றும் ரிடேஷனல் கிரவுண்ட் கிடைக்கிறது. கண்ட்ரோல் பட்டன் உள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் 347 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ் கிடைக்கிறது. இதனால் இன்டோர் மற்றும் அவுட்டோர் பகுதிகளில் கண்களுக்கு நன்றாக தெரியும் படி இதன் டிஸ்பிலே இருக்கும்.

மேலும் இதில் வாட்டர் ரெப்லட் சப்போர்ட், நைலான் ஸ்ட்ராப் போன்றவை கிடைக்கிறது. இதன் ஸ்ட்ராப் பொருத்தவரை பலவித வண்ணங்களில் கிடைக்கப் பெறுகிறது. இந்த மாடல் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும், ஏனெனில் இதில் வாட்டர் ரெஸ்டாரன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ip6x dust பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்சை கட்டிக்கொண்டு நீர்நிலைகளில் குதிக்கும் பொழுது 40 மீட்டர் ஆழம் வரை ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்.

மேலும் டெப்த் செக், மூச்சுத் திணறல் டெஸ்ட் , அண்டர் வாட்டர் சேப்டி வார்னிங் ட்ரையல் ரன் ட்ரக்கிங் பிரியர்களுக்கு சிறந்த ஃபியூச்சர் என பல வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் வெதர் டேட்டா நேவிகேஷன் சிஸ்டம், மேப்ஸ் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் ஹைக்கிங் போன்ற ஸ்போர்ட்ஸ் மோடுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. ஹுவாய் ஹெல்த் சப்போர்ட் கிடைக்கிறது. ஹெல்த் சப்போர்ட் மோட்கள் மூலம் ஈசிஜி, பிபிஜி சென்சார் சப்போர்ட் உள்ளது.

ஹார்ட் ரேட் மானிட்டர், மென்சுரல் சைக்கிளிங் ட்ராக்கிங் போன்ற ஹெல்த் சம்பந்தமான ஃப்யூச்சர்களும் இதழ் இடம் பெற்றுள்ளது. இதன் பேட்டரி சுமார் 10 நாட்களுக்கு நீடித்து இருக்கும் என்று ஹூவாய் தரப்பிடமிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வாய்ஸ் காலிங் கேமரா கண்ட்ரோல் போன்ற அத்தியாவசிய சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இதன் விலை 20,999 ரூபாய்க்கு இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கிறது. அதேபோல ஹூவாய் வாட்ச் பிட் 4 மாடலின் விலை 12,999 ரூபாயாக இருக்கிறது.

Leave a Comment