நத்திங் மொபைல் நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் பிளாக் ஷிப் மாடலான நத்திங் போன் 3 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பல கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. நத்திங் நிறுவனம் இந்த மொபைலுக்கென்று ஒரு ஆப்பரை அறிவித்துள்ளது. அதாவது இந்த மொபைலை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை முன்பதிவு செய்யும்போது சிறப்புச் சலுகையாக நத்திங் இயர் பேர்ட்ஸ் வெறும் 1ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜூலை 1 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நத்திங் போன் 3 மாடலை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்தச் சலுகை செல்லுபடியாகும். நத்திங் மொபைல் டெலிவரி செய்யப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு இந்த இயர்பட்ஸ் தயாரிப்பு பக்கத்தில் தள்ளுபடி விலையில் தெரியும். தகுதியுள்ள கஷ்டமர்கள் இதனை 1 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். நத்திங் போன் 3,ம்ன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 79,999 என்ற விலையிலும் 16 ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 89,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையாக இந்த மொபைலுக்கு 5000 வரை தள்ளுபடி ஆகும் வழங்கப்படுகிறது.

நத்திங் போன் 3 சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் டிஸ்பிளே hdr10+ சப்போர்ட்டுடன் 120hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் மற்றும் 4500 பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த மொபைலில் ஸ்னாப் டிராகன் 8s Gen 4 பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் ஃபிளாக்ஷிப் பிராசசர் என்றே சொல்லலாம். அனைத்து விதமான மல்டி டாஸ்க், கேம் விளையாடுவதற்கும் இந்த மொபைல் எவ்வித இடையூறும் இன்றி ஸ்மூத்தாக இயங்கும்.

இதில் ஆண்ட்ராய்டு 15 os உடன் நத்திங் os 3.5 இல் இயங்குகிறது. இது 5வருட சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் 7 வருட பாதுகாப்பு அப்டேட்டுகள் வழங்கப்படும் என்று நத்திங் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 50 எம்பி பிரைமரி கேமரா சோனி சென்ஸாருடன் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகியவற்றை கொண்டு வருகிறது.
முன் பக்கத்தில் இஐஎஸ் சப்போர்ட்டுடன் 50எம்பி செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பேட்டரி பொருத்தவரை இதில் 5500mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 65w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைபை, ப்ளூடூத், என்ஃப்சி, டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளது. தூசு மற்றும் வாட்டர் தடுப்புச் சான்றிதழான ஐபி 68 தரச் சான்றிதழ் உடன் வருகிறது.