விவோ நிறுவனம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் பிளாக் ஷீப் போன் விவோ எக்ஸ்200 எஃப்ஈ (vivo x200 fe) மாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. விவோவை பொறுத்தவரை அதன் கேமரா கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும். அதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை நம்மால் எடுக்க முடியும். அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் விவோ எக்ஸ்200 எஃப்ஈ மொபைலில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்
இதில் கைக்கு அடக்கமாக 6.3 இன்ச் அளவு கொண்ட எல்டிபிஓ அம்லேட்(ltpo amoled) டிஸ்ப்ளே 1.5k ரெசல்யூசன் உடன் 120hz ரெஃப்ரஸ் ரேட்டுடன் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டு வருகிறது. மேலும் இதில் டைமண்ட் சிட்டி 9300 பிளஸ் என்ற அதிநவீன மேம்படுத்தப்பட்ட பிராசஸரை கொண்டு இயங்குகிறது. இது தினசரி உபயோகத்திற்கும் கேமிங் மல்டிடாஸ்கிங், மல்டிமீடியா பயன்படுத்தும் போது எந்தவித இடையூறும் இன்றி மொபைலை ஸ்மூத்தாக இயங்க வைக்கும்.
ஓயஎஸ் பொருத்தவரை இதில் ஆண்ட்ராய்டு 15 ஓயஎஸ் மற்றும் விவோவின் ஃபன்டச் ஓயஎஸ் 15 உடன் வருகிறது. கிராபிக்ஸ் கார்டை பொறுத்தவரை இம்மார்டலிஸ் ஜி 720gpu கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் வருகிறது.

கேமராவை பொறுத்தவரை இதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா ஒயிட் கேமரா மற்றும் 50 எம்பி டெலி போட்டோ லென்ஸ் என ட்ரிப்பில் லேயர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இவை அனைத்தும் சோனி ஐஎம்எக்ஸ் 921 சென்சார் உடன் வருகிறது. மேலும் ஓஐஎஸ் சப்போர்ட் இதற்கு கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் 3x ஜூம் இன் ஆப்ஷனும் கிடைக்கிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் விவோ ஆரோலைட் வழங்கப்படுகிறது.
முன்புற கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொண்டு வருகிறது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை இதில் 6500mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் ஐபி 68 மற்றும் ஐபி 69 தர ரேட்டிங் தூசி மற்றும் தண்ணீர் பாதுகாப்பிற்கான சான்று உள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளது.
மேலும் இதில் 5g, டூயல் 4ஜி ஓல்ட், வைபை 7, ப்ளூடூத் 5.4, nfc, gps, டைப் சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. விலை பொருத்தவரை 12 ஜிபி ரேம் 54,999 ரூபாய்க்கும் 16 ஜிபி ரேம் விலை 59,999 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் இணையதளத்தில் இந்த மொபைல் விற்பனைக்கு கிடைக்கும்.