நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நாய்ஸ் பட்ஸ் மெரைன் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பட்ஸ் மெரைன் மிகமெல்லிய அலாய் மெட்டல் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. அலாய் மெட்டல் கேஸ் உடன் கிடைக்கும் இந்தியாவின் முதல் இயர்பட்ஸ் இது ஆகும். இத்துடன் கழற்றி மாட்டிக்கொள்ளக் கூடிய செயின் வழங்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் சக்திவாய்ந்த ஆடியோ வெளிப்படுத்த ஏதுவாக 13 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், அதிகபட்சம் 32db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ப்ளூடூத் 5.3, டூயல் டிவைஸ் பேரிங், லோ லேடன்சி மோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள இன்ஸ்டா-சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ் 120 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்குகிறது. இதன் மொத்த பேட்டரி பேக்கப் 35 மணி நேரங்கள் ஆகும். இந்த இயர்பட்ஸ் IPX4 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கிடைக்கிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் மெரைன் மாடலில் டூயல் டிவைஸ் பேரிங், லோ லேடன்சி மோட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் மெரைன் பிளாக் மற்றும் மெரைன் கிரே என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,499 ஆகும். அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 1,499 விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி கோநாய்ஸ் வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் துவங்குகிறது.