மிரட்டும் அம்சங்கள், அசத்தல் டிசைன்.. நோக்கியா 4ஜி போன் 2024 வெர்ஷன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிரான்டிங்கில் நோக்கியா 110 4ஜி மொபைல் போனின் 2024 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் சிறிய 2 இன்ச் TFT ஸ்கிரீன், 4ஜி கனெக்டிவிட்டி, 128MB ரேம், 64MB மெமரி வழங்கப்படுகிறது. இந்த மொபைல் 1000 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த மொபைல் அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது மற்றும் பாடல்களை கேட்க சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த மொபைலில் HD தரத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இது அழைப்புகளின் தெளிவான ஆடியோ கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மட்டுமின்றி இதில் பேசிக் கேமரா ஒன்றும் வழங்கப்படுகிறது. இவைதவிர எஃப்.எம் ரேடியோ, ஸ்னேக் கேம் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த மொபைல் கீபேட் வழங்கப்பட்டுள்ளது. இதில் நானோ பேட்டன் செராமிக் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. இது மொபைலை இயக்கும் அனுபவத்தை சுலபமாக்குகிறது. அதிக அம்சங்கள், அளவில் பெரியதாக இருக்கும் ஸ்மார்ட்போன் வேண்டாம் என்பவர்களுக்கு இந்த மாடல் குறைந்த விலை கச்சிதமான சாதனமாக இருக்கும்.

புதிய மேம்பட்ட 2024 நோக்கியா 110 4ஜி மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 2023 நோக்கியா 110 4ஜி மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment