ஓல்ட் ஸ்டைலுக்கு ஃபுல் ஸ்டாப்.. புது ஃபார்மில் களமிறங்கும் nothing இன் புதிய போன்.. என்ன மாடல் தெரியுமா

அடுத்த மாதம் நத்திங் மொபைல் நிறுவனம் தனது முதல் பிளாக் ஷீப் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது நத்திங் போன் 3 மாடலாகும்.

நத்திங் போன் 3a ஸ்மார்ட் போனில் உள்ள அதே பின்புற ஐஸ்லேண்ட் டிசைனை இதிலும் பொருத்தியுள்ளது. அதே கேமரா செட்டப்பை இந்த மொபைலிலும் தொடர உள்ளது. நத்திங் போன் என்றாலே பின்புறத்தில் மற்ற மொபைல் போன்கள் மாதிரி இல்லாமல் எல்இடி லைட் கொண்டு அதன் வடிவமைப்பு இருக்கும். ஆனால் இதில் அந்த மாதிரியான எல்இடி அமைப்பு இல்லாமல் டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே உடனான எல்இடி கொண்டுள்ளது.

நத்திங் போன் த்ரீ ஸ்மார்ட் போனில் சிறப்பம்சங்கள் :
இதில் 6.7இன்ச் எல்இடி ஆமோலெட் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இது 120 ஹெட்ஸ் ரெப்ரஸ் ரேட் 3000 நெட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸையும் கொண்டு வருகிறது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 ப்ராசசர் கொண்டு இயக்க படலாம் என்று தெரிகிறது.‌ இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 gb ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

Nothing Phone 3
Nothing Phone 3

பின்பக்க ட்ரிபிள் கேமரா செட்அப் ஆனது 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் முன்பக்க கேமரா 32 மெகா பிக்சல் கொண்டு இடம் பெறலாம்.கடைசியாக பேட்டரி மட்டும் பாஸ் சார்ஜிங் பொருத்தவரை 50w வயர்டு மற்றும் இருபது வாட் வயர்லெஸ் சார்ஜியை ஆதரிக்கக் கூடிய 5000mah பேட்டரியை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் இந்த மொபைலை பிளாக் ஷீப் செக்மெண்டில் விற்பனை செய்வதால் இதன் விலை இந்திய மதிப்பீட்டின் படி சுமார் 90000க்கு மேல் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அப்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டால் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Leave a Comment