40mm டிரைவர்ஸ், 80 மணி நேர பேக்கப்… பயங்கரமா ரெடியாகும் நத்திங் ஹெட்போன் 1

நத்திங் நிறுவனம் தனது முதல் ஓவர்-தி-இயர் ஹெட்போன் மாடலை நாளை (ஜூலை 1) அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் ஹெட்போன் 1 என அழைக்கப்படும் புதிய மாடல் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதே நிகழ்ச்சியில் வைத்து நத்திங் நிறுவனம் தனது போன் (3) மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சாதனங்கள் குறித்த டீசர்களை நத்திங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

எனினும், நத்திங் ஹெட்போன் 1 மாடல் குறித்த விவரங்களை டிப்ஸ்டரான யோகேஷ் பிரார் வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய நத்திங் ஹெட்போன் 1 மாடலின் எடை 329 கிராம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது சோனி நிறுவனத்தின் WH-1000XM6 ஹெட்போனை விட அதிக எடை ஆகும். எனினும், ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலை (384 கிராம்) விட எடை குறைவு ஆகும்.

புதிய நத்திங் ஹெட்போன் 1 ஆடியோ சாதனங்கள் சந்தையின் பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும், இந்த மாடல் ஏர்பாட்ஸ் மேக்ஸ்-ஐ விட தலைசிறந்த அம்சங்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஹெட்போன் 1 மாடலில் 40மில்லிமீட்டர் டிரைவர்கள் பொருத்தப்படுகிறது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவம் வழங்குகின்றன.

இதுதவிர நத்திங் நிறுவனம் புதிய ஹெட்போன் மாடலுக்காக பிரிட்டன் நாட்டை சேர்ந்த KEF எனும் ஆடியோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிறுவனம் ஹை-ஃபெடிலிட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் புதுமை மிக்க ஆடியோ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் புகழ் பெற்றுள்ளது. இதே விஷயங்களை KEF புதிய ஹெட்போன் 1 மாடலிலும் புகுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இத்துடன் ஹெட்போன் 1 மாடலின் பேட்டரி பேக்கப் விவரங்கள் தெரியவந்துள்ளது. பயனர்கள் புதிய ஹெட்போன் 1 மாடலை ANC வசதியின்றி பயன்படுத்தும் போது 80 மணி நேரம் வரை பேக்கப் பெறலாம். ANC இயக்கப்பட்ட நிலையில், ஹெட்போன் 1 மாடல் 35 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. அதிக தரமுள்ள LDAC பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஹெட்போன் 1 மாடல் அதிகபட்சம் 54 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை ரூ. 20,000-க்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஹெட்போன் 1 மாடலுடன் நத்திங் நிறுவனம் தனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கிறது. அதன்படி ஸ்மார்ட்போன் மற்றும் ஹெட்போனின் முழு விவரங்கள் நாளை தெரியவரும்.

Leave a Comment