நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போன் 3 மாடல் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நத்திங் போன் 3 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், புதிதாக க்ளிம்ப் மேட்ரிக்ஸ் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
நத்திங் போன் 3 அம்சங்கள்:
புதிய நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 1.5K 1260×2800 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு, பேக் பேனலில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, 3x ஆப்டிக்கல் ஜூம், 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 6, 5ஜி, 360-டிகிரி ஆன்டெனா, வைபை 7 மற்றும் அத்தியாவசிய சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதில் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 7.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் க்ளிம்ப் இன்டர்பேஸ்-க்கு மாற்றாக க்ளிம்ப் மேட்ரிக்ஸ் இன்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79,999 என்றும் டாப் எண்ட் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு நத்திங் இயர் மாடல் முற்றிலும் இலவசமாக பெற முடியம். இது அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.