100W சார்ஜிங் முதல் LED எபெக்ட் வரை… லீக் ஆன நத்திங் போன் (3) விவரங்கள்..!

நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய போன் (3) மாடல் அறிமுகம் செய்யப்பட்ட இன்னும் சில நாட்களே உள்ளன. ஜூலை 1-ம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. முன்னதாக நத்திங் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டீசர்களில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி புதிய நத்திங் போன் (3) மாடலில் புதிய எல்இடி எஃபெக்ட் வழங்கப்படுகிறது. இது நத்திங் பிராண்டின் முந்தைய மாடலில் வழங்கப்பட்ட க்ளிம்ப் இன்டர்ஃபேஸுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இந்த விவரம் தவிர நத்திங் சார்பில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்து.

இந்த நிலையில், கேட்ஜெட் பிட்ஸ் என்ற எக்ஸ் தள பதிவு ஒன்றில் நத்திங் போன் (3) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகி உள்ளது. எக்ஸ் தள பதிவின் படி புதிய நத்திங் போன் (3) மாடல் 6.7லஇன்ச் LTPO OLED பேனல், 50MP 3x ஜூம் பெரிஸ்கோப் லென்ஸ், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP + 50MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும், புதிய ஸ்மார்ட்போன் 5150mAh பேட்டரி, 100 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இ-சிம் மற்றும் என்எப்சி கொண்டிருக்கும்.

நத்திங் நிறுவனம் புதிய போன் (3) ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகள் வரை சாப்ட்வேர் சப்போர்ட் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி ஸ்மார்ட்போனுடன் நத்திங் நிறுவனம் தனது புதிய இயர்போன் மாடலையும் ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment