மிரட்டும் நத்திங் போன் 3.. 100w சார்ஜர்.. ஸ்னாப்டிராகன் 8 எலைட்.. இந்த தடவை மிஸ் ஆகாது..

நத்திங் போன் நிறுவனம் விரைவில் இந்தியாவில் நத்திங் போன் 3 மொபைலை வெளியிட இருக்கிறது ஏற்கனவே நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ போன்ற மொபைல்கள் மிட் ரேஞ்ச் வரிசையில் வெளிவந்து விற்பனையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் நத்திங் நிறுவனம் அதன் போன் 3 மாடலில் ஸ்னாப் டிராகன் 8 எலைட் பிராசஸரை கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து நத்திங் போன் ரசிகர்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் இதனுடன் போட்டியிடும் மாடல்கள் இதைவிட சிறந்த பிராசசர் கொண்டு வருகிறது.

ஆனால் நத்திங் இன்னும் பழமையான பிராசசர் பயன்படுத்துவது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான். இருந்தாலும் மொபைல் வெளியாகும் அன்று இதில் பல சிறப்பம்சங்கள் மக்களை கவரும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான லிக்ஸ் ஒன்றில் நத்திங் போன் 2 விட மூன்றில் பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதை காட்டுகிறது.

 

நத்திங் போன் 3 சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே அமைப்பை பொருத்தவரை தற்போது வெளிவந்த லீக்ஸ் அடிப்படையில் 6.7 இன்ச் 1.5 கே ரெசல்யூஷன் ஓ எல் இ டி பேனலுடன் 120 ஹெச் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பை பொருத்தவரையில் ஐம்பது எம்பி பிளஸ் 50 எம்பி பெரிஸ்கோப் பிளஸ் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் வருகிறது செல்பி கேமரா பொருத்தவரையில் 50mb உடன் வருகிறது.

5150 எம்எஹெச் கொண்ட பேட்டரியுடன் இதனை சார்ஜ் செய்வதற்கு 100 w சார்ஜிங் வசதியும் மற்றும் ரிவர்ஸ் ஒயர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. கனெக்டிவிட்டி பொறுத்தவரையில் என் எஃப் சி, எலக்ட்ரானிக் சிம் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 15 os அடிப்படையில் நத்திங் ஓ எஸ் 3.5 உடன் இயங்குகிறது.

மேலும் நத்திங் போனுக்கே உரிய எல்இடி எலிமெண்ட் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதில் சில புதிய பியூச்சர்களும் இடம்பெற்றுள்ளது அது இதற்கு முன் வெளியான நத்திங் போன் 1 மற்றும் நத்திங் ஃபோன் 2 போனிலிருந்து முற்றிலும் வேறுபட்டு புதுமையானதாக இருக்கும் என்று லீக்ஸ் இன் அடிப்படையில் வெளியான தகவல்கள் கூறுகிறது.

Leave a Comment