மொபைல் எண்ணானது ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி கிடைத்துவிடுன் என சொல்ல முடியாது. கடைக்காரர் தரும் எண்களிலையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதாகத்தான் இருக்கும். சிலருக்கு சில நேரங்களில் தங்களுக்கு விருப்பமான எண் கிடைக்கவும் செய்யலாம். இப்படியான மொபைல் எண்ணில் கூட சிலர் நியூமராலஜி கணக்கினை பார்ப்பார்கள். சிலர் தங்களுக்கு எளிதாக நினைவில் இருக்கு விதத்திலும் சிலர் தங்களுக்கு விருப்பமான எண்ணாகவும் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பர்.
இப்படிபட்டவர்களின் ஆசையை தீர்ப்பதற்கு பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தற்போது ஒரு வசதியினை கொண்டு வந்துள்ளது. இதன்படி நாம் சில வழிமுறைகளுன் மூலம் நமது மொபைல் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை நாமே உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியதாயிருக்கும்.

வழிமுறைகள்:
- முதலில் நாம் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.jio.com/selfcare/choice-number/ என்ற முகவரிக்கு சென்று Self care என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த செயலை நாம் MyJio செயலியிலும் செய்து கொள்ளலாம்.
- பின் Choice Number என்ற பட்டனை அழுத்தவும்.
- பின் நமக்கு விருப்பமான 4 முதல் 6 இலக்க மொபைல் எண்களை நாம் அதில் கொடுக்க வேண்டும்.
- இவ்வாறு கொடுத்தபின் நாம் ரூ.499 ஐ கட்டணமாக செலுத்திய பின் நமது எண்ணானது நமக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
- பின் 24 மணி நேரத்திற்கு பின் நமது எண்ணானது ஆக்டிவேட் ஆகும்.
நாம் புக் செய்த புக்கிங் கோடை நாம் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.