அறிமுகமானதும் ரூ. 10,000 வரை சலுகையா? புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு குவியும் ஆர்டர்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் நிறைந்த ஒன்பிளஸ் 13s மாடலில் 5850mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

ஒன்பிளஸ் 13s அம்சங்கள்:

டிஸ்பிளேவை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் சற்றே சிறிய அளவில் 6.32 இன்ச் 1.5K LTPO டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அக்வா டச் 2.0 தொழில்நுட்பம், குளோவ் மோட் கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை கையுறை அணிந்த நிலையிலும் பயன்படுத்த முடியும்.

புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம் மற்றும் 512GB மெமரி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 15 யூஐ கொண்டுள்ளது. இத்துடன் கஸ்டைமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனை பயனர்கள் அழுத்திப்பிடிக்கும் போது ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோட்களில் ஸ்மார்ட்போனை வைத்துக் கொள்ள முடியும். இதுதவிர கேமரா, ஆன்-ஸ்கிரீன் எழுத்து மொழிபெயர்க்கும் அம்சம், ஃபிளாஷ்லைட் உள்ளிட்ட அம்சங்களை இயக்கும்படியும் செட் செய்து கொள்ளலாம்.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP டெலிபோட்டோ கேமரா, EIS மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழஙக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் 5850mAh பேட்டரி, 80W சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 7, ப்ளூடூத் 6, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், கிரீன் சில்க் மற்றும் பின்க் சாட்டின் நிறங்களிலும் இதன் டாப் எண்ட் மாடல் ஒன்லி பிளாக் மற்றும் கிரீன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விலை, ஆஃபர் மற்றும் விற்பனை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனின் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 54,999 என்றும் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 59,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா இ ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜூன் 12-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5000 உடனடி தள்ளுபடியும், எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 5,000 வரையிலும் தள்ளுபடி பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

Leave a Comment