12GB ரேம், 5850mAh பேட்டரி, 80W சார்ஜிங்… புது ஒன்பிளஸ் போன்… ரூ. 8000 வரை தள்ளுபடி

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த பிராசஸர், அதிக திறன் கொண்ட பேட்டரி, தலைசிறந்த கேமரா என பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

சலுகையின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அமேசான் இந்தியா வலைதளத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ. 57,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50,000-க்கும் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.

சலுகை விவரங்கள்:

அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் வாங்கும் போது 5 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3000 வரை குறைக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54,998 என மாறிவிடும். இதுதவிர எஸ்பிஐ வங்கி கிரெடிட் பயன்படுத்தும் போது ரூ. 5000 வரை தள்ளுபடி பெறலாம். இதை சேர்க்கும் பட்சத்தில் ஸ்மரா்ட்போனின் விலை ரூ. 49,999 என மாறிவிடும்.

இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பயன்படுத்தும் போது ரூ. 4316 வரை சேமிக்க முடியும். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். எனினும், இது மாத தவணை முறை சலுகை மற்றும் அமேசான் பிஸ்னஸ் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. இந்த சலுகை ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கானது ஆகும்.

சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் 2640×1216 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மாரட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 15 கொண்டுள்ளது.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP லென்ஸ் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் 5850mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

Leave a Comment