ஒன்பிளஸ் நிறுவனம் தனது புல்லட்ஸ் வயர்லெஸ் Z3 நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஆப்டிமஸ் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சாதனமாக இந்த நெக்பேண்ட் மாடல் அமைந்துள்ளது. மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் புதிய ஒன்பிளஸ் நெக்பேண்ட் மாடல் பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் புல்லடர்ஸ் வயர்லெஸ் Z3 நெக்பேண்ட் மாடல் 26g எடை, காந்த சக்தியுடன் இயர்பட்ஸ் மற்றும் டாக்டைல் பட்டன் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதில் ஒன்பிளஸ் பேஸ்வேவ் அல்காரிதம் மூலம் மேம்படுத்தப்பட்ட 12.4mm டைனமிக் டிரைவர்ஸ், 3டி ஸ்பேஷியல் ஆடியோ உள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பப்படி Balanced, Serenade, Bass மற்றும் Bold என நான்கு ஆடியோ ப்ரோஃபைல்களில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் சவுண்ட் மாஸ்டர் EQ மூலம் வழங்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, AAC மற்றும் SBC கோடெக் மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே நெக்பேண்ட் மாடலை அதிவிரைவாக கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஹெட்செட்டில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஏஐ மூலம் இயங்கும் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் Z3 மாடலில் 220mAh பேட்டரி, அதிகபட்சம் 36 மணி நேர ஆடியோ பிளேபேக், 21 மணி நேர கால் டைம் உள்ளது. இந்த ஹெட்செட்-ஐ பத்து நிமிடங்கள் யுஎஸ்பி சி சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 27 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த ஹெட்செட் IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3 மாடல்- மாம்போ மிட்நைட் மற்றும் சாம்பா சன்செட் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட் விற்பனை ஜூன் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ், அமேசான், ப்ளிப்கார்ட் மிந்த்ரா வலைதளங்கள் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.