8GB+256GB மெமரி, 100W சார்ஜிங்… ரூ. 4500 வரை தள்ளுபடி… ஒன்பிளஸ்-இன் சூப்பர் அறிவிப்பு..!

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனிற்கு தற்போது அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வாரம் ஒன்பிளஸ் தனது நார்டு 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதையொட்டி தற்போது பழைய நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 29,999 மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 32,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது விலை குறைப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சலுகை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் தற்போது ரூ. 29,497 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மற்ற வலைதளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், அமேசான் தளத்தில் தற்போது இந்த சலுகை வழங்கப்படுகிறது.

சலுகையின்றி ஒன்பிளஸ் நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 32,999 விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3502 வரை விலை குறைப்பு மற்றும் வங்கி சலுகையாக ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அம்சங்கள்:

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 4 5ஜி ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 2772×1240 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 732 கிராபிக்ஸ், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14.1 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 கொண்டுள்ளது.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4 மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment