6700mAh பேட்டரி, 12GB ரேம்… அடுத்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ரெடி… ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த கையோடு ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது மிட் ரேஞ்ச் மாடல்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டது. இதனை உணர்த்தும் வகையில், ஒன்பிளஸ் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 5 மற்றும் நார்டு CE 5 ஸ்மார்ட்போன்களை ஜூலை 8-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வழக்கப்படி அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் புதிய மாடல் வரிசையில் இடம்பெறும் என்று தெரிகிறது.

இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், சீனாவில் அறிமுகமான ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் நார்டு பிரான்டிங்கில் விற்பனை செய்யப்படலாம்.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 5 ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் AMOLED ஸ்கிரீன், 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது.

நார்டு CE 5 மாடலை பொருத்தவரை 6.77 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டிமென்சிட்டி 9400e பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, பிரத்யேக பிளஸ் கீ ஷாட்கட், IR பிளாஸ்டர் மற்றும் 7100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் தான் அறிமுகமாகும் என்ற வகையில், இது பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Comment