டைமண்ட் சிட்டி 9000+.. 50 mp மெயின் கேமரா.. 7100mah பேட்டரி.. மார்க்கெட்டை அலற விட வரப்போகுது oneplus nord 5

ஒன் பிளஸ் நிறுவனம் என்றாலே பிளாக்ஷிப் மொபைலுக்கு பெயர் போனது. விலையும் அதிகமா இருக்கும் என்பதால் அதை பெரும்பாலனோர் வாங்குவதை தவிர்ப்பார்கள். அதன் காரணமாக oneplus நிறுவனம் மீட் ரேன்ஜ் விலையில் nord சீரிஸில் மொபைலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் இதுவரை வெளிவந்த nord 1,2,3,4 மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விற்பனையிலும் களை கட்டியது. அதன்படி nord 5 மற்றும் nord ce5 ஆகிய இரு மொபைலை மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது oneplus நிறுவனம்.

oneplus nord 5
oneplus nord 5

oneplus nord 5 சிறப்பம்சங்கள் :
6.6 இன்ச் தட்டை வடிவிலான 1.5k ரெசல்யூசனுடன் அமோலட் டிஸ்ப்ளே உடன் 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 9000 + பிராசசர் பயன்படுத்தப்படுகிறது. கேமரா செட்டப்பை பொறுத்தவரையில் 50 எம்பி மெயின் சென்சார் உடன் வருகிறது. மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டு டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

மேலும் இந்த மொபைல் மிகப்பெரிய பேட்டரி அமைப்பை கொண்டு வருகிறது. 7,100mah பேட்டரிவுடனும் இதனை சார்ஜ் செய்ய 80 w சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 gb ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்க பெறும் இந்த oneplus nord 5. விலை 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மொபைல் வெளியாகும் அன்று பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

Leave a Comment