ஒன் பிளஸ் நிறுவனம் நார்டு சீரிஸில் புது மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. பட்ஜெட் விலையில் விற்கப்படும் இந்த நார்டு சீரியஸ் மொபைல் இதன் கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஒன் பிளஸ் நார்டு சி இ 5 மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வெளியீட்டு தேதியை தற்பொழுது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 8 தேதி இதன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன் பிளஸ் நார்டு சிஇ 5 சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் 120 hz ரெப்ரெஷ் ரேட் உடன் அமலோடு டிஸ்ப்ளே வருகிறது. மேலும் இதில் டைமண்ட் சிட்டி 8350 பிராசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பிஜிஎம்ஐ, சிஓடிஎம் போன்ற அல்ட்ரா லெவல் கேம் பிரியர்களுக்கு pro கேம் மோட் மற்றும் அடாப்டிவ் பிரேம் பூஸ்டர் போன்ற ஆப்ஷன்கள் கிடைக்கிறது.
120 எஃப்பி எஸ் கேமிங் ரேட்டும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக 12 ஜிபி ரேம் மற்றும் 286 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த மொபைல் ஆக்சிஜன் ஓஎஸ் 15 மற்றும் ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்கும். இதன் கேமரா 50 எம்பி sony சென்சார் உடன் வருகிறது. மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பி ஷூட்டர் கேமரா இதில் உள்ளது.
இதில் 7,100mah கொண்ட பெரிய பேட்டரி பேக் உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதன் விலை 25,000 முதல் 30,000 பட்ஜெட்டுக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.