OnePlus நிறுவனமானது தங்களுடைய அடுத்த தயாரிப்பான OnePlus 12 மொபைலை இந்த வருட இறுதிக்குள் அல்லது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது. தற்போது இந்த மொபைலின் சில சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ளன.

விலை:
சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பான Oneplus 11 5G யின் விலை ரூ.56999 ஆக இருந்தது. அதனை வைத்து பார்க்கும் பொழுது இதன் விலை ரூ.60000-த்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என தெரிகிறது.
சேமிப்பு தன்மை:
OnePlus 12 மொபைலானது 16ஜிபி RAM மற்றும்256ஜிபி இண்டெர்னர் ஸ்டோராஜ் வசதியுடன் வரவிருக்கிறது. மேலும் இது Snapdragon 8 gen 3 சிப்செட்டையும் Qualcomm ப்ராஸசரையும் கொண்டிருக்கும். மேலும் இது ஆண்டிராய்டு 14 OS உடன் வெளிவரவிருக்கிறது.
திரை:
OnePlus 12 மொபைலானது 6.7 இன்ச் fluid LTPO AMOLED திரையுடன் 2K resolution மற்றும் 120Hz refresh rate உடன் தயாரகவிருக்கிறது.
கேமரா:

இதில் 50 MP பிரைமரி கேமரா சென்சார், 50 MP அல்ட்ரா வைரு கேமரா, 64 MP டெலிபோட்டோ கெமார என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 32 MP செல்பி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
பேட்டரி தன்மை:
இதன் 5400mAh பேட்டரி அமைப்பானது இந்த மொபைலுக்கு இன்னும் வலுவூட்டுகிறது. மேலும் 100வாட் வயர் சார்ஜ் மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜ் வசதியினையும் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.