ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துருச்சு OpenAI Sora.. இந்தியாவுக்கு எப்போ வரும்?

OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

OpenAI Sora

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ துறையில் முன்னனியில் இருக்கும் OpenAI நிறுவனம், ஏஐ மூலம் வீடியோக்களை உருவாக்கும் Sora செயலியை ஆப்பிளின் ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கென கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோக்கள் உலகம் முழுவதும் இருக்கும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

OpenAI, Sora-வை வெளியிட்டு முதல் நான்கு முதல் 5 நாட்களிலேயே ஒரு மில்லியன் டவுன்லோடுகளைக் கடந்து பெருவெற்றி பெற்றது. ஐஸ்டோரில் இலவச செயலிகளுக்கான பட்டியலில், தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது இந்த செயலி.

இதையடுத்து OpenAI நிறுவனம் Sora செயலிய எப்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது. இந்தநிலையில், அதற்கான அறிவிப்பை OpenAI வெளியிட்டிருக்கிறது. இதன்படி, OpenAI Sora-வை அமெரிக்கா, கனடா, தென்கொரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருக்கும் பயனாளர்கள் தற்போதைய சூழலில் டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதேநேரம், இந்தியா, ஐரோப்போ உள்ளிட்ட பகுதிகளில் Sora-வை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால், ஓரிரு வாரங்கள் அல்லது மாதத்தில் OpenAI, Sora இந்திய பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Leave a Comment