ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய A5 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் ஒப்போ A5x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. MIL-STD-810H தரச் சான்று பெற்றிருக்கும் ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் தீவிர தீ, மாசு மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இத்துடன் IP65 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 360 டிகிரி ஆர்மர் பாடியுடன் ஃபிளாக்ஷிப் தர ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் 6300 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.99mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி, 45w சூப்பர்வூக் சார்ஜர் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 37 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றி விடும்.
இந்தியாவில் புதிய ஒப்போ A5 5ஜி ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், மிஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,499 என்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.