ஒப்போ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களான oppo ரெனோ 14 5ஜி மொபைலை உலகளாவிய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் இந்த மொபைலை தற்போது வெளியிட்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த மொபைலை வெளியிட உள்ளது ஒப்போ நிறுவனம்.

14 சீரியஸ் மொபைலில் சிறப்பம்சங்கள் :
இதில் 6.5 இன்ச் ஓஎல்இடி(oled) டிஸ்ப்ளே 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8350 என்ற அதிநவீன ஜிப்செட் சேர்த்து வெளி வருகிறது. மேலும் இதில் எல்பிடிடிஆர் 5 எக்ஸ் மற்றும் யுஎஃப் எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடனும் வருகிறது. இதனால் மிகவும் ஸ்மூத்தான அனுபவத்தை பெற முடியும்.
கேமரா அமைப்பை பொருத்தவரையில் ட்ரிபிள் கேமரா பின்புற அமைப்பில் வரவுள்ளது. அதில் ஓஐஎஸ்(ios) உடன் 50 மெகாபிக்சல் சோனி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது. மேலும் 50 மெகா பிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இதில் 6000 mah பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80w ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வருகிறது. இந்த மொபைலில் முக்கிய அம்சங்களில் பிளாஷ் போட்டோகிராபி ஏஐ எடிட்டர் 2.0 மற்றும் கலர் ஓஎஸ் ஆண்ட்ராய்டு 15 ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த மொபைலில் ஐபி 69 ரேட்டிங் கொண்டுள்ளது. பின்புறம் வெல்வெட் டெக்சர் கிளாஸ் பாக் கூட கூடிய மெட்டல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சீனாவில் வெளியான மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள். கூடிய விரைவில் இந்தியாவின் இதே சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது