ஒப்போ நிறுவனம் தனது k சீரிஸில் புதிய மொபைலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. அதற்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி OPPO k13x 5g மொபைல் பட்ஜெட் விலையில் வெளியாக உள்ளது.
oppo k13xசிறப்பம்சங்கள் :
oppo k13x மொபைலில் டைமண்ட் சிட்டி 6300 5g பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. செயல் திறனை பொருத்தவரை மிகவும் ஸ்மூத்தாக இந்த பிராசசர் வேலை செய்யும். மேலும் பின்புற டூயல் கேமராவாக 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் பொக்கே கேமராவுடன் வருகிறது. மேலும் இந்த கேமராவில் பல ஏஐ சிறப்பம்சங்கள் உள்ளது.

அதில் ஏ ஐ எரைசர், ஏஐ பிலர், ஏஐ ரிப்லக்ஷன் ரிமூவர், ஏஐ கிளாரிட்டி என் ஹன்சர்.. போன்ற ஏஐ வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளது, மேலும் கூகுள் ஜெமினி கொண்டு நீங்கள் விரும்பியவற்றை இதன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் கலர் ஓஎஸ் 15 உடன் வருகிறது. இந்த மொபைலில் 6000mah பேட்டரி அதனை சார்ஜ் செய்வதற்கு 45 w சூப்பர் ஓக் ஃபாஸ்ட் சார்ஜரும் உடன் வருகிறது. இது 91 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் அடையும் என்று உறுதி அளிக்கிறது. மேலும் 5 வருட பேட்டரி ஹெல்த் கேரண்டியும் தருவதாக oppo நிறுவனம் உறுதியளித்துகிறது.
மேலும் ஐபி 65 ரேட்டிங் உடன் தூசி மற்றும் தண்ணீர் எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இதன் விலை தோராயமாக 15000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும் ஜூன் 23ஆம் தேதி பிளிப்கார்ட் இணையதளம் மற்றும் ஓப்போ ஸ்டோர் ஆகிய தளங்களில் இதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளிவரும்.