oppo நிறுவனம் இந்தியாவில் ஜூலை மாதத்தில் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நாளில் புதிய டேப்லெட் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒப்போ பேட் எஸ்சி (oppo pad se) டேப்லெட் வருகிற ஜூலை மூன்றாம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
oppo pad se சிறப்பம்சங்கள் :
oppo pad எஸ்சி டேப்லெட்டில் 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 500 நீட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் 90 hz ரெஃப்ரேஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 180hz சாம்பலிங் ரேட் இருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராசசர் மீடியா டெக் ஹீலியோ ஜி 100 இந்த பிராசசர் தினசரி உபயோகத்திற்கு அலுவலக உபயோகத்திற்கு சிறப்பாக செயல்படும் மேலும் இதில் ஆண்ட்ராய்டு 15 கலர் os 15 உடன் வருகிறது.
இதில் 4 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 6ஜிபிரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டுகள் கிடைக்கிறது. இதில் 5 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது. மேலும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. இதில் 9340mah கொண்ட பெரிய பேட்டரி இருக்கிறது. இதனை சார்ஜ் செய்வதற்கு 33w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதில் பயன்படுத்தி 11 மணி நேரங்கள் வீடியோ கண்டு மகிழலாம். இதன் விலை இந்தியாவில் 15000 பட்ஜெட்டுக்குள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முழு விவரம் ஜூலை 3 அன்று வெளியாகும்.