பட்ஜெட் விலையில் மொபைல்கள் என்றாலே ஓப்போ மாடல்களுக்கு தனி மவுசு உண்டு. அப்படி மொபைல் விற்பனையில் கலக்கி வருகிறது oppo. அந்த வகையில் புதிய டேப்லெட்டை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. ஓப்போ பேட் எஸ்சி (oppo pad se) என்ற டேப்லெட் மாடலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இதில் 11 இன்ச் கொண்ட 2k ரெசொல்யூஷன் உடன் 1200*1920 பிக்செல் ரேஷியோவில் 90hz ரெஃப்ரெஸ்ட்டுடன் எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய டிஸ்ப்ளே கேம் விளையாடுவதற்கு தினசரி உபயோகத்திற்கு அலுவலக உபயோகத்திற்கு மற்றும் மல்டி டாஸ்க்கிங் போன்ற அனைத்து விதமான வேலைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கலர் ஓஎஸ் 15 ஆண்ட்ராய்டு 15 os கொண்டு இயங்கும் இந்த டேப்லட். மேலும் இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும் என்று ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இதில் இருக்கும் மீடியாடெக் டைமன் சிட்டி ஜி100 பிராசசர் மேம்படுத்தப்பட்டு சிறந்த செயல் திறனை வழங்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் இதில் மெமரி கார்டு பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இதில் இருக்கிறது. கேமரா அமைப்பை பொருத்தவரை பின்பக்க சிங்கிள் கேமரா 5 எம்பி மற்றும் முன்புற செல்பி கேமரா ஐ டி எம் பி 5எம்பி உடன் வருகிறது. இதில் 9,340 mah என்ற ஒரு மினி பவர் பேங்க் பேட்டரி உள்ளது.
இதனை சார்ஜ் செய்வதற்கு 33 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் விலை 15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டேப்லட் வெளியாகும் அன்று இதன் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரமும் விலை பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளிவரும்.