ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரியஸில் புதிய மொபைலை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய ஓப்போ ரெனோ 14 ப்ரோ மாடலை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 14 ப்ரோ சிறப்பம்சங்கள் :
6.8 இன்ச் ஓ எல் இ டி டிஸ்ப்ளே வசதி வசதியுடன் 1.5 ரெசல்யூஷன் கூடிய 120ஹட்ஸ் ரெப்ரஸ்ரேட்டுடன் வருகிறது. இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராசஸரைப் பொறுத்தவரை டைமன் சிட்டி மீடியா டெக் டைமண்ட் சிட்டி 8450 எஸ் ஓ சி சிப்செட் பொருத்தி வருகிறது.
இதனால் தினமும் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் ஹைகிராபிக்ஸ் கேம்கள் போன்றவற்றிற்கு ஏற்றதாக மிகவும் ஸ்மூத்தாக இந்த பிராசசர் இயங்கும். மேலும் இதில் 12 ஜிபி ரேம் + 256 gb ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் +512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மொபைலை பொருத்தவரை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை பின்புறம் ட்ரிபிள் 50mp கேமரா உடன் வருகிறது. மேலும் முன்புற செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 20 எம்பி உடன் வருகிறது. இதில் ஐபி 69 தர தூசு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சான்றிதலுடன் வருகிறது.
இதில் ஐ ஆர் பிளாஸ்ட், டைப் சி போர்ட், ஸ்டியரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகள் இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது. பேட்டரி பொருத்தவரை 6200 mah என்ற பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 50w ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான லீக்ஸின் அடிப்படையில் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. விலை பொறுத்தவரையில் 54,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரும் வாரங்களில் மொபைல் வெளியாகும் அன்று அதிகாரப்பூர் அறிவிப்பை oppo நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.