6200mah பேட்டரி.. 80w சார்ஜர்.. 50mp சோனி கேமரா.. பக்கா பிளான் போட்ட oppo என்ன மாடல் தெரியுமா..?

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான மொபைல்களை விற்பனை செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மிட் ரேஞ்ச் மார்க்கெட்டை பிடிக்க oppo ரெனோ மாடலின் 14 சீரியஸை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 4-ம் தேதி இந்த மொபைல் இந்திய மார்க்கெட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இதற்கு முன் வெளியான ஒப்போ 13 சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 14 சீரிஸ் அடுத்த மாதம் வெளியாகவதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதன் விற்பனையை இந்த மொபைல் தட்டி தூக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

oppo reno 14 5g
oppo reno 14 5g

oppo Reno 14 Pro 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.8இன்ச் அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 120 hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை 50mp முதன்மை கேமரா வருகிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு 50 எம்பி டெலி போட்டோ லஞ்சுடன் வருகிறது. மேலும் முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் உடன் 18x ஜூம் வசதியுடன் வருகிறது.

இதில் ஆண்ட்ராய்டு 15 os உள்ளது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை 6200mah கொண்ட பெரிய பேட்டரி வருகிறது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80w சார்ஜிங் வசதியும் உள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்பு அமைப்பை பொருத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 உடன் வருகிறது. சிப்செட் பொருத்தவரை மீடியா டெக் டைமண்ட் சிட்டி 8450 எஸ் ஓ சி கிடைக்கிறது.

மேலும் இது மல்டிடாஸ்கிங் தினசரி உபயோகத்திற்கும் ஹை கிராபிக்ஸ் கேம் என அனைத்திற்கும் இடையூறு இல்லாமல் இயங்கக் கூடியதாக இருக்கும். 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி உடன் கிடைக்கிறது. இந்த மொபைலில் வரக்கூடிய கேமராக்கள் 4k சப்போட்டுடன் வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

ஏஐ ஃபியூச்சர்களை பொறுத்தவரை ஏ ஐ எடிட்டர் 2.0 லைவ் போட்டோ 2.0 போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. மேலும் ஓ ஐ எஸ் எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசர் இந்த கேமரா அமைப்பு இடம் பெறுகிறது. மேலும் இந்த மொபைலைப் பற்றியும் முழு விவரங்கள் மற்றும் விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

Leave a Comment