டைமண்ட் சிட்டி 8450.. 50mp சோனி கேமரா.. 50w சார்ஜர்.. நாளை வெளியாகிறது oppoவின் புதிய போன்.. என்ன மாடல் ?

oppo நிறுவனத்தின் oppo reno சீரியஸ் மாடல் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் நாளை ரெனோ சீரியஸில் இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. oppo reno 14 மற்றும் oppo reno 14 ப்ரோ. முன்னதாக வெளியான 13 சீரியஸ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தாலும் 14 சீரியஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இருப்பினும் நாளை வெளியாக இருக்கும் ஒப்புரனோ 14 ப்ரோ மாடலை பற்றிய சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம்.

இதில் 6.8 இன்ச் அளவுள்ள ஓ எல் இ டி ஸ்ப்ளே 1.5 கே ரெசல்யூசன் உடன் 120ஹச் ரெஃப்ரஷ்ரேட் உடன் வருகிறது. மேலும் இதில் தரமான தினசரி உபயோகத்திற்கும் சிறு சிறு எடிட்டிங் மற்றும் மல்டி டாஸ்க் போன்றவற்றிற்கு எந்த ஒரு தடையின்றி இயங்கக்கூடிய மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8450 பிராசசர் உடன் வருகிறது. 50 எம்பி சோனி கேமரா 50 எம்பி அல்ட்ரா வைட் கேமரா 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் என ட்ரிபிள் கேமரா இதில் இருக்கிறது.

Oppo Reno 14 Pro
Oppo Reno 14 Pro

மேலும் செல்ஃபி கேமரா 50 மெகாபிக்சல் உடன் வருகிறது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை இதில் 6200mah என்ற பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 50வாட் சார்ஜர் வருகிறது. மேலும் ஐபி 69 தரச் சான்றிதழ் உடன் வருகிறது. இதில் ஐ ஆர் பிளாஸ்டர்,usb டைப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் வைபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இன்டர்நெட்டில் வெளியான தகவலின் அடிப்படையில் இதன் விலை 40,000ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை முழு அறிவிப்பு வெளியாகும்.

Leave a Comment