6200mah பேட்டரி.. டைமண்ட் சிட்டி 8350.. பட்டைய கிளப்பும் கேமரா.. வந்தாச்சு ஓப்போவின் புது மொபைல்.. என்ன மாடல்

ஒப்போ ரெனோ சீரியஸ் மொபைல்களுக்கு இந்தியாவில் தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் அவர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒப்போ நிறுவனம் ரெனோ சீரியஸில் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஒப்போ ரெனோ 14 சீரிஸ் மொபைல் தான். இன்று முதல் இதன் விற்பனை ஓப்போ அதிகாரப்பூர்வ கடைகள் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கப் பெறுகிறது. ரெனோ சீரியஸின் முக்கிய அம்சமே அதன் கேமரா தான். கேமராவை முன்னிறுத்தி இந்த மாடல் விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் இது எஐ போர்ட்ரேட் கேமரா மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

oppo reno 14 சீரிஸ் மொபைல் சிறப்பம்சங்கள் :
இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே 1.5k resolution உடன் ஓஎல்இடி டிஸ்ப்ளே 120hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ரெனோ 14 மொபைலில் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 8350 பிராசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு ஆல் ரவுண்டர் ப்ராசசர். அனைத்து விதமான செயல்களுக்கும் இந்த பிராசசர் பக்காவாக பொருந்தும். இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெனோ 14 ப்ரோ மாடலில் வருகிறது.

ப்ரோ வேரியன்ட் 55,000 வரை அதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெனோ 14 மாடல் 43000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் ஐபிஎஸ் 66 ஐபி 68 ஐபி 69 ரேட்டிங் கொண்டுள்ளது. ரெனோ 14 மொபைலில் பின்புறம் 50 எம்பி ப்ரைமரி கேமரா 50 எம்பி வைடு ஆங்கில் 8 எம்பி அல்ட்ரா ஒய்ட் என ட்ரிப்பில் ரியர் கேமராவுடன் வருகிறது.

செல்பி கேமராவை பொறுத்தவரை 50 எம்பி உடன்படுகிறது. மேலும் ரெனோ 14 ப்ரோ வேரியண்டில் அதே கேமரா அம்சத்துடன் பின்புறத்தில் 50 எம்பி சென்சார் உடன் வருகிறது. ரெனோ 14 மாடலுக்கு பேட்டரியை பொருத்தவரை 6000 mah கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 80 வாட் சார்ஜிங் வசதியும் வருகிறது. ப்ரோ மாடலில் 6200mah கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கும் அதே சார்ஜர் வருகிறது. மற்றும் 50w வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீடையும் கொடுக்கிறது. இந்த மொபைல் இந்திய சந்தையில் பிளாக் ஷிப் விலையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கேமரா பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 50000 ரூபாய் பட்ஜெட்டில் இந்த மொபைல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

Leave a Comment