ஓப்போ k13x 5g மொபைல் சில நாட்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்றைய காலத்தில் பட்ஜெட் விலையில் மொபைல் வாங்குபவர்கள் பெரும்பாலானவர்கள் ஏழை எளிய மக்கள் தான். ஒரு மொபைல் வாங்கவே கஷ்டப்படுகிறார்கள் இதில் வாங்கிய மொபைலை எதிர்பாராத விதமாக ஒரு தடவை கீழே விழுந்தாலோ அல்லது தவறுதலாக யாராவது கீழே போட்டாலோ அதற்கான மாற்று செலவு அதிகமாகிறது.
மலிவு விலை மொபைல் என்றாலே எளிதில் உடையும், தரம் குறைவாக இருக்கும் என்ற நிலையை இருக்கிறது. தற்போது அதற்கு குட்பை சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஓபோவின் புது மாடல். oppo k13 x5g ஒரு சாதாரண ஃபோன் அல்ல இது இதற்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ஓப்போ k12x 5g அடுத்த மாடல் தான். இந்த முறை இன்னும் வலிமையாக உறுதியாக அதேபோல பட்ஜெட் விலையில் இராணுவ தரத்திலான உறுதி மிகப் பெரிய பேட்டரி நல்ல கேமரா என அனைத்து தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைலாக வெளிவந்துள்ளது.
மொபைல் எதிர்பாராத விதமாக கீழே விழும் போது இந்த ஓபோவில் உள்ள ஸ்பாஞ்ச் பயோமெடிக் ஷாக் அப்சார்ப்ஷன் அமைப்பு அதன் பாகங்களை பாதுகாக்கிறது. இதன் உறுதியான பாடி அமைப்பு எந்த டிகிரி கோணத்தில் கீழே விழுந்தாலும் போனில் எந்த ஒரு சேதமும் இல்லாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதன் டிஸ்ப்ளே ப்ளாக்க்ஷிப் ஃபோன்களில் வரும் கிரிஸ்டல் ஷீல்ட் அமைப்புடன் வருகிறது கிளாஸ் திரையை பாதுகாக்கிறது.
சமீபத்தில் இந்த போனை வைத்து செய்யப்பட்ட பரிசோதனைகள் 1.4 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் இருந்து கீழே போடப்பட்டது. ஆனால் போனுக்கு எதுவுமே ஆகவில்லை. அதேபோல் 30-க்கும் மேற்பட்ட கிரானைட் கல்லின் மீது போட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் வெற்றி அடைந்தது. தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்புக்காக ஐபி 65 சான்றிதழ் இடம் பெற்றுள்ளது.
மேலும் மொபைலை பாதுகாக்க ஆன்டி ட்ராப்ஸ் ஷீல்ட் கேஸ் பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஏதும் அழைப்பு வந்தாலோ அல்லது மழையில் உபயோகிக்கும் சூழ்நிலை வந்தாலோ கிளவுட் டச் தொழில்நுட்பங்கள் திரை ஈரமாக இருந்தாலும் துல்லியமாக செயல்பட வைக்கிறது. இந்த oppo k13x 5g மொபைலில் முந்திய மாடலை விட பலவிதமான பாதுகாப்பு அம்சங்களும் தொழில்நுட்ப அம்சங்களும் அதிக அளவில் கொடுக்கப்பட்டிருந்தாலும் oppo k12x5g விற்கப்பட்ட அதே விலையில் இந்த மொபைலும் விற்கப்படுகிறது.
இந்த மொபைலில் தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 6000 mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 45 வார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் டைமண்ட் சிட்டி 6300 பிராசசர் இருக்கிறது. மற்றும் 50 எம்பி கேமராவும் இருக்கிறது மேலும் இது 4,6,8, ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிடைக்கப்பெறுகிறது.