இந்தியாவின் பிரபல பேமெண்ட்ஸ் செயலியான PhonePe, OpenAIயுடன் இணைந்து ChatGPTஐ செயலிக்குள் சேர்த்துள்ளது. இதனால் PhonePe பயன்படுத்தும் பல வேலைகளை AI மூலம் எளிதாக செய்ய முடியும்.
இந்த வசதி என்ன செய்யும்?
- நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு PhonePe செயலிக்குள் ChatGPT போலவே கேள்வி கேட்கலாம்.
- பயணம், ஷாப்பிங், பில்கள், ரீசார்ஜ் போன்றவற்றில் AI பரிந்துரைகள் கிடைக்கும்.
- PhonePe for Business பயன்படுத்தும் முதலாளிகளுக்கு AI மூலம் உதவி, வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள உதவி கிடைக்கும்.
பயனர்களின் நன்மை
- செயலியைப் பயன்படுத்துவது, இன்னும் ஈசியாகவும் வேகமாகவும் இருக்கும்.
- சலுகை, வாங்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றில் பரிந்துரைகள் கிடைக்கும்.
- சாட் GPT போல செயலிக்குள் உதவி தேடும்போது பேசிக் கேட்டு தீர்வு பெறலாம்.
- இந்த வசதி எல்லோருக்கும் உடனே வந்துவிடாது. மெல்ல மெல்ல PhonePe பயனர்களுக்கு வரும்.
- தனியுரிமை (privacy) பாதுகாப்பு குறித்து கூட PhonePe கவனிக்கும் என்று நிறுவனத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.
PhonePe செயலியில் Chat GPT சேர்ப்பதால், இந்திய பயனர்களுக்கு புதிய AI அனுபவத்தை தரப்போகிறது. இனி UPI பயன்பாடு ஓரளவு எளிதாகவே இருக்கும்!