govt update news
அட இது புதுசா இருக்கே..அப்போ இனி வங்கிக்கே போக வேணாமா?..கலக்குறீங்களே PNB..

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் நமக்கு பல செளகரியங்கள் கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை அனைத்து நிறுவனங்களில் தற்போது உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் Meteverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.

metaverse facility
இந்த வசதியில் நாம் நமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும் இதன் மூலம் நாம் மற்றவர்களுடனும் தொடர்பினை வைத்து கொள்ளலாம். நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகத்தினை கற்பனை உலகமாக மாற்றுவதற்கு Augmented Reality மற்றும் அந்த கற்பனை உலகத்தில் நாம் உணர்ச்சிபூர்வமாக வாழ்வதற்கு Virtual reality என இவ்விரண்டையும் சேர்த்ததுதான் Metaverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.
இந்த வசதியினை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Virtual Bank வசதியின் மூலம் நமக்கு பல வசதிகளும் கிடைக்கின்றன. இது இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த வசதியின் மூலம் வங்கிகளின் வசதியான பணத்தினை டெபாசிட் செய்வது, லோன் வசதிகள், Retail/MSME வாசதிகள், டிஜிட்டல் திட்டங்கள், அரசின் திட்டங்கள் போன்ற வசதிகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு Virtual Reality மூலம் பெற்று கொள்ளலாம்.

PNB virtual reality feature
இந்த வசதியினை அதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதாவது அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தும் நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த வங்கியானது 3டி வசதியுடன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.
