ரியல்மீ நிறுவனம் அதன் புதிய ரியல்மீ 11 5ஜி-யை (Realme 11 5G) வெளியிடத் தாயாராகி வருகிறது. ஆனால், ரியல்மீ 11 ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல், ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ரியல்மீ 11 5ஜி ஆனது வியட்நாம் மற்றும் தைவானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுவனம் இந்தியாவில் அதன் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், ஒரு புறம் இந்த ரியல்மீ 11 5ஜி ஆனது ரியல்மீ 11 எக்ஸ் 5ஜி (Realme 11x 5G) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிராசஸர்:
ரியல்மீ 11 5ஜி ஆனது மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2) உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ SoC (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 13 உடன் கூடிய ரியல்மீ யூஐ 4.0 உள்ளது.
Realme115G
டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.7 இன்ச் அளவுள்ள எப்எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதனுடன் 680 நிட்ஸ் பிரைட்னெஸும் உள்ளது. இது 190 கிராம் எடை மற்றும் 8.05 மிமீ தடிமன் கொண்டிருக்குக்கலாம்.
Realme115G
கேமரா:
இதில் 108எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோவைக் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்புறத்தில் செல்ஃபிக்காக 16எம்பி ஷூட்டர் உள்ளது. மேலும் இதில் புளூடூத் 5.2, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களும் உள்ளன.
Realme115G
பேட்டரி:
ரியல்மீ 11 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும். இதனை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் சீக்கிரமாக மொபைலை சார்ஜ் செய்ய முடியும்.
Realme 11 5G
ஸ்டோரேஜ்:
இந்தியாவில் மிட்நைட் பிளாக் மற்றும் பர்பில் டான் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வரலாம் எனக் கூறப்படுகிறது.