7000mAh பேட்டரி, 16GB ரேம், 512GB மெமரி… சூப்பர் ஆஃபர்ஸ் உடன் விற்பனைக்கு வந்த ரியல்மி போன்

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 7 டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே மாதத்தின் இறுதி வாரத்தில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்டின் ஃபார்முலா ஒன் டீமுடனான கூட்டணியின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக ஆஸ்டன் மார்டின் ரேசிங் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. கூடவே ஆஸ்டன் மார்டின் பிராண்டின் சில்வர் விங்ஸ் லோகோ ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் இடம்பெற்று இருக்கிறது. மற்றப்படி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ரியல்மி GT 7 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் மாடலில் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒற்றை 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 49,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்டின் ரேசிங் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. ஆன்லைன் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ரியல்மி மெயின்லைன் ஸ்டோர்களிலும் நடைபெறுகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 4167 செலுத்த வேண்டும். இதுதவிர ஜூன் 13-ம் தேதியில் இருந்து ஜூன் 19-ம் தேதிக்குள் ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு ஆண்டிற்கு எக்ஸ்ட்ரா ஸ்கிரீன் டேமேஜ் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்களுக்கு ரூ. 5000 போனஸ் தள்ளுபடி மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 47,499 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் அம்சங்கள்:

ஆஸ்டன் மார்டின் அராம்கோ ஃபார்முலா ஒன் டீமுடனான கூட்டணி காரணமாக ரியல்மி நிறுவனம் ரியல்மி GT 7 டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஆஸ்டன் மார்டின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் நிறம் பிராண்டின் எஃப் 1 கார்களை நினைவூட்டும் வகையில் உள்ளது.

மற்றப்படி அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP69 தரச்சான்றுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Leave a Comment