10000 போதும்.. 6000mah பேட்டரி .. தரமான மொபைலை களம் இறக்கிய ரியல் மீ

சைனீஸ் மொபைல் நிறுவனமான realme பட்ஜெட் ரக மொபைல் விற்பனையில் தனி இடத்தை பெற்றுள்ளது. தற்போது realme c73 5g மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய பேட்டரி மற்றும் சிறந்த பர்பாமன்ஸ் செய்யக்கூடிய பிராசசர் என அனைத்தையும் பொருத்தி பட்ஜெட் விலையில் சிறப்பான மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் சிறப்பம்சங்களைப் பற்றி பார்க்கலாம் :
டிஸ்ப்ளே 6.6 இன்ச் அங்குல 120 hz ரெஃப்ரெஷ்ரேட்டுடன் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல் சி டி வடிவமைப்பில் வருகிறது. மீடியா டெக் டைமண்ட் சிட்டி 6,300 என்ற மிட் ரேஞ்ச் பவர்ஃபுல் ப்ராசசர் கொண்டு வருகிறது. ஆக்டோகோர் 2.4 ghz வேகத்தில் இதன் வடிவமைப்பு உள்ளது.

கேமரா அமைப்பை பொருத்தவரையில் பின்புறத்தில் 32 மெகாபிக்சல் சாம்சங் சென்சார் கொண்டு வருகிறது, மேலும் முன்புற கேமரா அமைப்பு 8 மெகாபிக்சல் கொண்டு வருகிறது. பேட்டரி பொறுத்தவரையில் 6000 mah என்ற பெரிய அளவில் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

realme c73 5g
realme c73 5g

இதன் மெமரி பொறுத்தவரையில் 4ஜிபி வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது. ஸ்டோரேஜ் பொருத்தவரையில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் ip64 ரேட்டிங் உடன் வருகிறது. மொபைலின் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 300% அல்ட்ரா வால்யூம் மோட்உடன் வருகிறது, இதனால் மல்டிமீடியா பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மொபைலில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் மூலம் உங்களுடைய பிற சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை பொருத்தவரையில் 4ஜிபி+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 10499 ரூபாய்க்கும் 4 ஜிபி+128 ஜிபி வேரியண்ட் 11499 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

Leave a Comment